உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க! 

0
225
#image_title
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த டீயை தயார் செய்து குடிங்க!
உடல் எடையை வேகமாக  குறைக்க உதவும் அற்புதமான டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகமாக இருப்பது அல்லது அதிகரிப்பது என்பது அனைவருக்கும் சாதாரணமாக நடப்பது தான். இந்த உடல் எடை அதிகரித்தால் ஒரு சிலருக்கு எளிமையாக குறைந்து விடும். ஆனால் ஒரு. சிலருக்கு உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தாலும் உடல் எடை குறையாது.
அதற்கு காரணம் நம் உடலில் கெட்ட தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக இருப்பது தான். கெட்ட கொழுப்புகள் உடலில் அதிகரிக்க கூடாது என்றால் நாம் உண்ணும் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஆனால் நாம் நம்முடைய நாவிற்கு சுவை அளிக்க கூடிய துரித உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு விடுகின்றோம். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கின்றது. இதை குறைக்க சிறந்த ஒரு பொருள் நெல்லிக்காய் ஆகும்.
நெல்லிக்காய் என்பது அதிக ஆயுளைக் கொடுக்கக் கூடிய பொருள் மட்டுமில்லை. இது எளிமையாக நம்முடைய உடல் எடையை குறைக்க கூடிய ஒரு பொருளாகும். நெல்லிக்காயுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து டீ தயார் செய்து குடிப்பதால் உடல் எடையை எளிமையாக குறைக்க முடியும். அது எவ்வாறு என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* நெல்லிக்காய் பொடி
* இஞ்சி
* மிளகுத் தூள்
* தேன்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து பின்னர் அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு இஞ்சியை அறுத்து போட்டு கொதிக்க விட வேண்டும்.
இது கொதித்த பின்னர் இதில் நெல்லிக்காய் பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதன் பின்னர் இதை வடிகட்டி எடுத்து அதில் கால் டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்து விட்டு பின்னர் இதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை குடிக்கலாம். இவ்வாறு டீ தயார் செய்து குடிக்கும் பொழுது உடலில் அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடை வேகமாக குறைகின்றது.
Previous articleசைனஸ் பிரச்சினையா? இந்த இலையை வெச்சி ஆவி புடிங்க!
Next articleஉடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறனுள்ள இந்த எண்ணெய்