நம்முடைய அழகை பராமரிக்க வேண்டுமா!!? அப்போ இந்த உணவுகளை தினமும் சாப்பிடாலாம்!!!
நமக்கு இருக்கும் அழகை பராமரிக்க நாம் தினமும் மருந்துகள் எடுத்துக் கொள்கின்றோம். சிகிச்சை பெற்று வருகின்றோம். பல வகையான மாத்திரைகளையும் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
இவையெல்லாம் பலன்கள் அளித்தாலும் சில சமயங்களில் பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும். பக்க விளைவுகள் இல்லாமல் நமது அழகை பராமரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.
அழகை பராமரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்…
* நாம் தினமும் அன்றாட வாழ்க்கையில் ஒரு முட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தின் அழகிற்க்கு நல்லது.
* ஒரு 5 பாதாம்களை தண்ணீரில் ஊறவைத்து ஒருநாள் சாப்பிட வேண்டும். இதையே தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.
* வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த ஜூஸ் வகை4ளை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவடையும்.
* நாம் தொடர்ந்து தேனை சாப்பிட்டு வந்தால் சருமத்தை எப்பொழுதுமே புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவி செய்யும்.
* இளநீர் அடிக்கடி நாம் குடித்து வந்தால் இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
* எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சருமத்தை பாதுகாக்கும்.
* சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி, பப்பாளி, கொய்யா, வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வரலாம்.
* சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய கற்றாழை ஜெல்லை நமது சருமத்தில் தேய்த்து குளித்து வரலாம்.
* எலுமிச்சைசாறில் ஒரு. சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அந்த கலவையை நமது சருமத்தில் தேய்த்து வந்தால் நல்ல பலன் நமது சருமத்திற்கு கிடைக்கும்.
* வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெயை தோலில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் நமது உடலில் உள்ள சூடு குறையும். மேலும் நமது சருமம் பொலிவு பெரும்.