அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!
நாம் சமைக்கும் பொழுது கணவகமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.நம் கவனம் சிறிதளவு சிதறினாலும் அவ்வளவு தான் அது நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும்.சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும்.பாத்திரமும் வீணாகி விடும்.அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
நாம் அதிகம் அடிபிடிக்க வைக்கும் பாத்திரம் என்றால் அது பால் சுட வைக்கும் பாத்திரம் தான்.அடுப்பில் பாலை ஊற்றி வைத்து வெகு நேரம் அங்கே தான் இருப்போம்.அதுவரை பொங்காத பால் நாம் சற்று நகர்ந்து வேறு வேலையை செய்ய தொடங்கியதும் பொங்கி வந்து பால் பாத்திரத்தையும்,அடுப்பையும் நாசம் செய்து விடும்.இதனால் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் டீ வைக்கும் பாத்திரம் கருகிய நிலையில் தான் இருக்கும்.
இப்படி அடிபிடித்து கருகிய பாத்திரத்தை 10 நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி செய்தால் அடிபிடித்த பாத்திரம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பழைய மாதிரி பளபளப்பாக மாறி விடும்.
தேவையான பொருட்கள்:-
*கோல்கெட் – சிறிதளவு
*விம் ஜெல் – 1 தேக்கரண்டி
*வாஷிங் பவுடர் – 1 தேக்கரண்டி
*வினிகர் – 1 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
*முதலில் அடிபிடித்த பாத்திரத்தில் பல் துலக்க பயன்படுத்தும் கோல்கெட்டில் சிறிதளவு சேர்த்து கொள்ளவும்.
*அதன் பின் அதில் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் விம் ஜெல் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
*அதன் பிறகு வாஷிங் பவுடர் 1 தேக்கரண்டி கொட்டவும்.
*இறுதியாக வினிகர் 1 தேக்கரண்டி எடுத்து அந்த பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.அதோடு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
*5 நிமிடங்களுக்கு பிறகு ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு அதனை நன்கு தேய்த்து கொள்ளவும்.பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவவும்.இந்த முறையில் அடிபிடித்து தீஞ்சி போன பாத்திரங்களை உடனடியாக பளபளப்பாக மாற்றி விட முடியும்.
மற்றொரு முறை:-
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை பழம் – 1
*பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
செய்முறை:-
*அடிபிடித்த பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
*அதில் 1 தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடா சேர்க்கவும்.
*பிறகு எலுமிச்சை பழத்தை இரண்டாக கட் செய்து கொள்ளவும்.அதன் சாறை அந்த பாத்திரத்தில் பிழிந்த விடவும்.
*இதனை 15 நிமிடங்கள் வரை அப்டியே ஊற விடவும்.
*15 நிமிடங்கள் கழித்து பாத்திரம் துலக்க பயன்படும் ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு அதனை நன்கு தேய்த்து கொள்ளவும்.பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவவும்.இந்த முறையில் அடிபிடித்து தீஞ்சி போன பாத்திரங்களை உடனடியாக பளபளப்பாக மாற்றி விட முடியும்.