முகத்தை தங்கம் போல பளபளக்க செய்ய வேண்டுமா! தக்காளி பப்பாளி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க!!

0
50
#image_title
முகத்தை தங்கம் போல பளபளக்க செய்ய வேண்டுமா! தக்காளி பப்பாளி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க
நம் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு சந்தைகளில் பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த பொருட்களில் உடனடியாக பலன்கள் தருவதற்காக பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றது. எனவே இந்த ரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பின்விளைவு இல்லாத அதே சமயம் நம் முகத்திற்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய இயற்கையான வழிமுறைகள் பல இருக்கின்றது. அதில் பப்பாளி மற்றும் தக்காளியை வைத்து நாம் இயற்கையாகவே நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றி முகத்தின் அழகை பராமரிக்கலாம். அது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம்.
முகத்தை பளபளப்பாக்க பப்பாளி பயன்படுத்தும் முறை…
பப்பாளி சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய மருந்தாக பயன்படக்கூடிய பொருளாக இருக்கின்றது. இந்த நம்பிக்கை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தும் மறையும்.
நன்கு பப்பாளியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தோல் நீக்கி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழிந்து முகத்தை அரசினால் முகம் பளபளப்பாக மாறத் தொடங்கும்.
முகத்தை பளபளப்பாக மாற்ற தக்காளியை பயன்படுத்தும் முறை…
பப்பாளியை போலவே தக்காளியும் சருமத்திற்கு தேவையான பல நன்மைகளை வழங்கும். இந்த தக்காளியை நாம் சருமத்திற்கு பயன்படுத்த முதலில் நன்கு பழுத்த தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் மோர் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை நம் முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழிந்து தழுவினால் போதும். முகம் பளபளப்பாக மாறத் தொடங்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.