நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

Photo of author

By Sakthi

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

Sakthi

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!!

நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தொப்பையை குறைக்க இந்த பதிவில் ஒரு சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தொப்பை என்பது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அடிவயிற்றுப் பகுதியில் சேர்வதால் ஏற்படுகின்றது. இந்த தொப்பை பிரச்சனை இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். உடல் எடையை குறைப்பது மூலமாக குறிப்பாக தொப்பையை குறைப்பதன் மூலமாக பல பாதிப்புகள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். தொப்பையை குறைப்பதாக மூலமாக இரத்தவோட்டம் சீரடைகின்றது. தூக்கத்தின் தரம் மேம்படைகின்றது.

இந்த தொப்பையை குறைத்து ஆரோக்கியம் வாழ்வதற்கு தேவையான சில டிப்ஸ் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

* தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் நாம் அதிகம் புரதச்சத்து உள்ள உணவுப் பேர்களை சாப்பிட வேண்டும். இந்த புரதச்சத்து நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டவை. இதன் மூலம் உடல் எடையும் குறையும். தொப்பையும் குறையும்.

* தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் நாம் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளில் டிரான்ஸ் கொழுப்புகள், செயற்கை இனிப்பு, உப்பு, சர்க்கரை ஆகியவை சேர்க்கப்படுகின்றது. நம் உடலில் கொழுப்பை அதிகரிக்கும். இதனால் இந்த உணவை நாம் தவிர்க்கவேண்டும்.

* உடலில் இருக்கும் தொப்பையை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சி, கார்டியோ உடற்பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து தொப்பை குறையும்

* தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் நாம் போதுமான அளவு தூங்க வேண்டும். வயிற்றில் கொழுப்பு சேர்வதில் தொடங்கி உடல் நலத்தை பாதிக்கும் பல பிரச்சனைகளுக்கு அளவற்ற தூக்கமும் குறைந்த அளவு தூக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. உடல் எடையை தொப்பையை குறைக்க ஒருநாளுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டும்.

* தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் மதுவை தொடக்கூடாது. குறைவான அளவில் மது அருந்துவது உடல் நலத்திற்கு நன்மையை அளித்தாலும் அதிகளவு மது அருந்தும் பொழுது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மது அருந்தும் பொழுது அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புகளை சேர்க்கின்றது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கின்றது. எனவே மது அருந்துவது தவிர்த்தால் தொப்பையை குறைக்கலாம்.

* சாப்பிடுவதால் தொப்பை அதிகரிக்கின்றது என்று சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது. மேலும் சாப்பிடுவதை தள்ளிப்போடுவது தவறான செயல். சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிடமால் இருந்தால் உடலில் உள்ள திசுக்கள் ஆற்றலுக்காக சிதைக்கப்படுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிக்கும். எனவே சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.