முழங்கால்களை பலப்படுத்த வேண்டுமா!!? இதோ இந்த ஆசனங்களை செய்யுங்கள்!!! 

Photo of author

By Sakthi

முழங்கால்களை பலப்படுத்த வேண்டுமா!!? இதோ இந்த ஆசனங்களை செய்யுங்கள்!!!
நம்முடைய முழங்கால்களை வலிமைப்படுத்தும் சில ஆசனங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஆசனங்களை செய்வதன் மூலமாக முழங்கால்கள் தசை பலப்படும். முழங்கால் வலி ஏற்படுவது குறையும். முழங்கால் வீக்கம் குறையும்.
இந்த ஆசனங்களை செய்வதன் மூலமாக முழங்கால்கள் மட்டுமல்ல. நம்முடைய தொடைப்பகுதியில் உள்ள எலும்புகள் முதுகுப் பகுதியில் உள்ள எலும்புகள் அனைத்தும் புலப்படும். தற்பொழுது முழங்கால்களை பலப்படுத்திக் கூடிய ஆசனங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
முழங்கால்களை பலப்படுத்தும் ஆசனங்கள்…
* விராபத்ராசனம் செய்வதன் மூலமாக நமது முழங்கால் பகுதியை பலப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த ஆசனம் செய்வதன் மூலமாக நமது முழங்கால்களில் உள்ள தசைகளை நாம் வலிமைப்படுத்திக் கொள்ளலாம்.
*  நாம் முழங்கால் பகுதியை வலிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் திரிகோனாசனம் செய்யலாம்.  இந்த ஆசனம் செய்வதன் மூலம் முழங்கால் பகுதியை சுற்றி உள்ள தசைகளை வலிமைப்படுத்தி தசைகளை நீட்டிக்க உதவி செய்கின்றது.
* முபக்ஷழங்கால் பகுதியை பலப்படுத்திக் கொள்வதற்கு உட்கடாசனம் செய்வது நல்ல தீர்வை தரும். மேலும் இந்த ஆசனம் நம்முடைய முழங்கால் பகுதிகளை ஆதரிக்கும் குவாட்ரைசெப்ஸ் என்பதை பலப்படுத்தும்.
* முழங்கால்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் விருக்ஷாசனம் செய்யலாம். மேலும் இந்த ஆசனம் செய்வதன் மூலமாகவும் முழங்கால் பகுதியை சுற்றியுள்ள தசைகளை நாம் பலபடுத்தலாம்.
* முழங்கால் பகுதிகளை பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் சலபாசனம் செய்யலாம். மேலும் இந்த ஆசனம் செய்வதால் நம்முடைய கீழ் முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை பலப்படுத்தும். மேலும் கால் பகுதியில் உள்ள தசைகளையும் வலிமைப்படுத்தும்.
* முழங்கால்களை பலப்படுத்திக் கொள்ள சுப்தா பதங்குந்தாசனம் செய்யலாம். மேலும் இந்த ஆசனத்தை செய்வதன் மூலமாக உள் தொடைப் பகுதி, தொடையில் இருக்கும் எலும்புகள் ஆகியவற்றை பலப்படுத்துகின்றது.
* நம்முடைய முழங்கால் பகுதியை வலிமைப்படுத்த சேதுபந்தாசனம் செய்யலாம். மேலும் சேதுபந்தாசனம் செய்வது மூலமாகவும் தொடை எலும்புகளை பலப்படுத்தலாம்.
* முழங்கால் பகுதியை பலப்படுத்த சுகாசனம் செய்யலாம். மேலும் சுகாசனம் செய்வதன் மூலமாக கால்களை பலப்படுத்தலாம்.