கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

Divya

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

உதடு பிங்க் நிறத்தில் காணப்பட்டால் அவை நம் முக அழகை மேலும் கூட்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோரின் உதடுகள் பொலிவற்று கருமை நிறத்தில் தான் காணப்படுகிறது. இதை மறைக்க நாமும் லிப் பாம், லிப்ஸ்டிக் என்று இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நம் கருமை உதட்டை இயற்கை முறையில் கலராக மாற்ற முயற்சிப்பது சிறந்த தீர்வாக இருக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*தேன் – 1/2 தேக்கரண்டி

*கடுகு எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை உதடுகளுக்கு உபயோகிப்பதற்கு முன்னர் உதட்டை எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள தேன் + கடுகு எண்ணெய் கலவையை உதடுகளுக்கு தடவி மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 3 முதல் 5 நிமிடங்களுக்கு செய்து 1/2 மணி நேரம் கழித்து உதடுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்து வருவதன் மூலம் கருமை மற்றும் வறண்ட உதடு பிங்க் நிறத்திற்கு மாறும்.