நரை முடியை வெள்ளையாக மாற்ற வேண்டுமா… இந்த பொருள்களை வத்து கருப்பாக மாற்றலாம்!!

Photo of author

By Sakthi

 

நரை முடியை வெள்ளையாக மாற்ற வேண்டுமா… இந்த பொருள்களை வத்து கருப்பாக மாற்றலாம்…

 

நம்மில் பலருக்கு இருக்கும் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த பதிவில் ஒரு சில பொருள்களை வைத்து மருந்து தயாரித்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

 

தலையில் இருக்கும் நரை முடியை நீக்குவதற்கு நாம் பெரும்பாலும் செயற்கையான ஹேர் டை கிரீம்களை பயன்படுத்துகிறோம். செயற்கையான ஹேர் டை கிரீம் எல்லாம் தற்காலிக பலனை தந்து பின்னர் நாட்கள் செல்ல செல்ல பல தீமைகளை நமக்கும் நமது முடிக்கும் தந்துவிடும். செயற்கையான ஹேர் டை பயன்படுத்தி தீமைகளை பெறுவதற்கு பதிலாக நாம் இயற்கையான முறையில் இந்த நரை முடியை எவ்வாறு கருப்பாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

நரை முடியை கருப்பாக மாற்ற தேவையான பொருள்கள்…

 

* கருஞ்சீரகப் பொடி – இரண்டு ஸ்பூன் அளவு

 

* மருதாணி பொடி – ஒரு ஸ்பூன்

 

* அவுரி பொடி – ஒரு ஸ்பூன்

 

* தண்ணீர் – தேவையான அளவு

 

செய்முறை…

 

நாட்டு மருந்து கடைகளில் மருதாணி பொடி, கருஞ்சீரக பொடி, அவுரி பொடி அனைத்தும் கிடைக்கும். அதை அனைத்தும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

 

ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாங்கி வைத்துள்ள மருதாணி பொடி, அவுரி பொடி, கருஞ்சீரகப் பொடி மூன்றையும் அந்த பவுலில் மேற்குறிப்பிட்ட அளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

 

பின்னர் இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் இந்த பவுலை ஒரு தட்டை வைத்து மூடி வைத்துக் கொள்ளவும். ஒரு நாள் இரவு முழுவதும் இதை அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் இதை பயன்படுத்தலாம்.

 

இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…

 

நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த மருந்தை காலையில் தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழிந்த பிறகு தலைக்கு குளித்து விடலாம்.

 

வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும். நான்கு வாரங்களுக்கு பிறகு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைக்கும்.