உங்கள் சருமம் வெள்ளையாக மாற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…
நாம் எல்லோருக்கும் சருமம் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். பாலை தினமும் நாம் குடிக்கிறோம். பாலில் இருக்கும் ஊட்டச்சத்து நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. பாலில் நிறைய கால்சியம் சத்து உள்ளது. இதனால் நம்முடைய முகம் அழகாக பிரகாசிக்கும்.
தினமும் பால் குடித்து வந்தால் நம்முடைய எலும்புகள் வலுவடையும். ஆனால், பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் நாம் எவ்வளவு அழகாக மாறுவோம்ன்னு தெரியுமா?
சரி வாங்க பாலை வைத்து எப்படி நம் முகத்தை அழகாக மாற்ற வேண்டும் என்று பார்ப்போம் –
தினமும் பாலை நம் முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து மசாஜ் செய்து கழுவினால் முகம், பொலிவுடன் அழகாக மாறும்.
தினமும் பாலை நம் முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
தினமும் பாலை நம் முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தை மென்மையாக மாறும்.
வாரத்தில் இரு முறை உடல் முழுக்க பாலை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் உடல் முழுவதும் பொலிவு பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பாலுடன் கொஞ்சம் ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கி, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊறவைத்து கழுவினால், சருமம் பளிச்சிடும்.
பாலில், தேனை சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து சருமம் நன்றாக பொலிவடையும்.
பாலில், சிறிது பப்பாளியை சேர்த்து நன்றாக மசித்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு நீரில் கழுவினால் சருமம் நன்கு புத்துணர்ச்சி பெறும்.
கேரட்டில், சிறிது பாலை கலந்து அதை முகத்தில் தடவி, 3 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவினால் முகம் பளிச்சிடும்.