உக்ரைனில் 2வது நாளாக தொடரும் போர்! நாட்டு இளைஞர்களுக்கு உக்ரைன் அதிபர் விதித்த தடை!

0
82

சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் போர் பதற்றம் நிலவி வந்தது.இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அந்த இரு நாடுகளுக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கினர்.

ஆனாலும்கூட ரஷ்யா இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்தது ரஷ்யா.

இதனை கண்ட அமெரிக்கா ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே அமெரிக்காவை சார்ந்தவர்கள் உடனடியாக உக்ரைனிலிருந்து புறப்படுங்கள் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் திடீரென்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷ்யா சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணைத் தாக்குதல் உள்ளிட்டவற்றை நடத்தியது இதனால் உக்ரைன் நிலைகுலைந்து போனது.

ஆகவே ஒட்டுமொத்த உலக பார்வையும் ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பியிருக்கிறது. நேற்றையதினம் தாக்குதலில் உக்ரைன் படை வீரர்கள் பொதுமக்கள் என்று 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது. ஆனாலும் 100க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ரஷ்யாவின் தரப்பில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. ரஷ்யாவின் 2 ஹெலிடப்பட்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் 2 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைபிடித்துள்ளதாக தெரிகிறது. முதல் நாள் போரில் 137 பேர் பலியானதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது ரஷ்ய நாட்டின் படைகளிடமிருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனிலுள்ள பல்வேறு நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

போர் தொடர்ந்து கொண்டிருப்பதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் ரஷ்யாவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடி வருகின்றோம் என்று உக்ரைன் அதிபர் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

அதோடு 18 முதல் 6 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்திருக்கிறது.. அதோடு கீவ் நகரிலுள்ள மக்களுக்கு 10000 தானியங்கி துப்பாக்கிகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.