இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!
தற்போது சில காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையமும் தினந்தோறும் இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறியும் வருகின்றனர்.தற்போது மழை வருவதால் அதிகளவு தொற்று பரவுமா என்ற அபாயமும் மக்களிடையே காணப்படுகிறது.
நேற்று நீலகிரி,தேனி,திண்டுக்கல்,கோயம்புத்தூர்,சிவகங்கை,கன்னியகுமாரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியது.இன்று வானிலை ஆய்வு மையம் ஐந்து மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை என கூறியுள்ளது. அந்த ஐந்து மாவட்டங்கள்,தேனீ,தென்காசி,கோவை,நீலகிரி மற்றும் கன்னியாகுமரி என கூறியுள்ளனர்.
அதேபோல இடியுடன் கூடிய கன மழை உள்ள மாவட்டங்கள் திண்டுக்கல்,ஈரோடு மற்றும் நெல்லை போன்றவை கூறியுள்ளனர்.சென்னை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படுமே தவிர மழை வர வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளார்.தற்போது வரை களியலில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.அதேபோல குழித்துறையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அத்தோடு வரும் 13 தேதி வரை கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகளில் மணிக்கு 40கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும் எனக் கூறியுள்ளனர்.அதேபோன்று கன்னியாகுமரி போன்ற கடலோரப்பகுதிகளில் காற்றானது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் மழை காலங்களில் தங்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.ஜிகா வைரஸ் தற்போது கேராளவில் காணப்படுகிறது.இந்த மழைக்காலங்களில் தான் அதிகளவு கொசு உற்பத்தி காணப்படும்.மக்கள் தங்கள் வீட்டினுள் தண்ணீர் போன்றவை தேங்காமல் பார்த்த்துக் கொள்ள வேண்டும்.அத்தோடு அரசாங்கம் கூறும் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.