எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

0
296
#image_title

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பொது மக்கள் யாரும்  தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை வலியுருத்துகிறது.

வானிலை அறிக்கை மையம் வெளியிட தகவலின் படி இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

அதனையொட்டி இன்று கொளுத்தும் வெயில் காரணமாக காலை     11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , திருவள்ளூர் , ராணிபேட்டை , வேலுர் போன்ற பல மாவட்டங்களில் வெப்பநிலை 41 முதல்  42 C வரை அதிகரித்துள்ளது.

மேலும் அதிக வெப்பநிலை இருப்பதன் காரணமாக  குழந்தைகள் , கர்ப்பிணி பெண்கள் , முதியவர்கள்  வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயிலின் அதிகமாக இருப்பதால்  வரும் ஞாயிற்றுக்கிழமை  வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி அதிக வெயில் காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்படலாம் அதனால்  முதியவர்கள் மற்றும்  குழந்தைகள்  உள்ளிட்டோர் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleதொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 
Next articleசிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!