உஷார்.. மறந்து கூட இவர்கள் புதினா சாப்பிட கூடாது!! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
278

உஷார்.. மறந்து கூட இவர்கள் புதினா சாப்பிட கூடாது!! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வீட்டில் சாதாரணமாக வளர்க்கப்படும் செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம் தான். இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதினாவில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது அதனால் இதனை தினமும் நம் உணவில் ஏதேனும் ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதனால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவைகள் குணமாகும்.

புதினா இலையினால் தயாரிக்கப்படும் எண்ணையை நம் உடம்பில் எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அதன் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும். உடனடியாகவே வலிகள் அனைத்தும் மறைந்துவிடும் என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த புதினாவை ஆல்கஹால் தயாரிக்கும் பொழுது சிறிதளவு சேர்க்கின்றனர். புதினா இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது.

பேசும்பொழுது ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும் அவ்வாறு ஏற்படுபவர்கள் புதினாவை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் அவ்வாறு வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்காக புதினா மாத்திரைகளையும் தயாரிக்கப்படுகின்றது.

தலைவலி,குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு புதினா நல்ல தீர்வை கொடுக்கும். மேலும் குடலிறக்கம்,பித்தப்பை, அடைப்பு உள்ளவர்கள் புதினா இலைனால் செய்யப்பட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

குறிப்பாக கல்லீரல் பிரச்சனை, குடலிறக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் அனைவரும் புதினாவால் செய்யப்பட்ட மாத்திரை அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தலைவலி, உடம்பு வலி ,வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு நாளொன்றுக்கு 90 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரையும் புதினாவை எடுத்துக் கொள்ளலாம்.

Previous articleவிருச்சிக ராசி இன்றைய ராசிபலன்!!குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleகாய்ச்சல் சளி ஒரே நாளில் சரியாக வேண்டுமா? இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here