பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!
சேலமிலிருந்து குமராபாளையம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் மற்றும் அரசு பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானிக்கு செல்கின்றது.
இது தொடர்ந்து நடைபெறுவதால் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் குழந்தைகள் பள்ளி ,மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். மேலும் பவானி சந்தைக்கு எடுத்துச் செல்ல காய்கறி மூட்டை ,பூ மூட்டை போன்றவற்றை சுமந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.
இதை தடுப்பதற்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் இருக்கு அனைத்து தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் திமுக நகர செயலாளரிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து தான் தலைவராக இருக்கும் பகுதியில் இப்படி மக்கள் அவதிப்படுவதை கண்டு திமுக நகர செயலாளர் கோபமடைந்து குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாத பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் இவ்வாறு தொடர்ந்து பேருந்தை நிறுத்தாமல் சென்றால் மேல் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக எச்சரித்தனர். அந்த சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.