மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!

0
89

மூன்றே இலைகள் போதும்! தீராத மார்பு சளி ஆஸ்துமா குணமாகும்!!

சுவாசம் மண்டலம் நாம் உயிர் வாழ முக்கியமான இன்றியமையாத ஒன்று. நுரையீரல் தான் வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து காற்றில் உள்ள ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த சுவாசம் மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். நமது ஆயுட்காலம் நீடிக்கவும் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் சுவாசம் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே இதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதில் ஏற்படக்கூடிய நோய்கள் அனைத்தும் நாள்பட்டதாக இருக்கக் கூடியதாய் இருக்க உள்ளது.

அவ்வப்போது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய இருமலோ சளியோ ஏழு நாட்கள் சரியாகிவிடும். ஆனால் நாள்பட்டு இருக்கக்கூடிய கோழை, நாள்பட்டு இருக்கக்கூடிய சளி மார்புச் சளி. வெளியே வர முடியாமல் இருப்பது அல்லது மாதாமாதம் மீண்டும் வருவது. இதுக்கு நிறைய ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொள்வதுண்டு. அதற்கு இணையாக ஆயுர்வேதத்திலும் மருந்துகள் உள்ளன. இயற்கை மருத்துவத்தில் நிறைய மூலிகைகள் கோலை அகற்றியாக செயல்படக்கூடியது ஆன்டி பாக்டிரியல் பொருளாக செயல்பட கூடியது. சுவாச தேற்றியாக செயல்பட கூடியது.

சுவாசம் மண்டலம் தொடர்பான நோய்களில் ரொம்பவும் நாள்பட்டதாக இருப்பது நெஞ்சு சளி. நிறைய பேருக்கு வெளியில் வரக்கூடாத அளவிற்கு தொடர்ந்து நெஞ்சு சளி எவ்வளவு சளி வெளியேறினாலும் மீண்டும் மீண்டும் ஊறிக்கொண்டே இருப்பது. அல்லது வெளியில் வருவதற்கு சிரமமாக இருப்பது மூச்சு விடுதலில் சிரமம். அடுத்த ஆஸ்துமா இது போல நாள்பட்ட நோய்கள் பல உள்ளன.

இந்த சுவாசம் மண்டல தொடர்பான நோய்களை குணப்படுத்த மூன்று முக்கிய பொருட்களைக் கொண்ட அருமருந்து ஒன்றினை பற்றி பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இது நாம் நம் வீட்டில் தயார் செய்து கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.

அந்த வகையில் தற்போது நெஞ்சு சளி இருப்பவர்களுக்கு அதை கரைத்து வெளியேற்றக் கூடிய அற்புதமான மூலிகைகள் தான் கீழே தொடர்ந்து வரும் மூன்று மூலிகைகளும்.

1. தும்பை; தும்பை பற்றி பல பேருக்கு தெரியாது இது ஒரு காயகற்ப மூலிகை இதில் பல வகைகள் உள்ளன. முக்கியமாக விச அகற்றியாக அல்லது விஷம் முடிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் நாம் தனியாக நீர் விட்டு வளர்க்க வேண்டாம். அதுவே தானாக வளரும். இது விச அகற்றியாக செயல்படக்கூடியது. கோலை அகற்றியாக செயல்படக்கூடியது. கப நீக்கியாக செயல்படக்கூடியது. நம் நுரையீரலின் ஆற்றலை அதிகரிக்க கூடியது. தொண்டையில் சளி தொண்டையில் சளி நின்று கொண்டே இருத்தல் போன்றவற்றை கரைத்து வெளியேற்றக் கூடியது.

* 5 – தும்பை இலைகள்
* ஒரு கைப்பிடி அளவு துளசி.
* 5 – தூதுவளை
* 5 – மிளகு
தூதுவளை. நுரையீரல் என்றதும் நமது நினைவுக்கு வருவது தூதுவளை. சுவாச மண்டல சுருக்கம் எனப்படக்கூடிய மூச்சு விடுதலில் சிரமம் இளைப்பு நோய் இருக்கக்கூடிய வர்களுக்கு தூதுவளை அருமருந்து. சரியாகிறதோ சரியாகவில்லையோ அப்பப்போ சிறிது சேர்த்துக் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் முழுவதுமாக குணமாகும்.

இந்த 4 பொருட்களையும் தட்டி அல்லது லேசாக அரைத்துக் கொண்டு ரசம் மாதிரி அரை லிட்டர் தண்ணீர் விட்டு அது 200 மில்லி தண்ணீராக வற்றும் வரை சுண்டைக்காய்ச்சு வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை நான்கு பகுதிகளாக பிரித்து காலை மதியம் மாலை மற்றும் இரவு 50 மில்லியாக குடித்து வரலாம். இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது தேன் கலந்து பருகி வரலாம். தேவையில்லை எனில் வெறுமனே பருகலாம்.
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் எனில் 20 மில்லி தேன் கலந்து கொடுக்கலாம்.
இந்த மூன்று வகை இலைகளும் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் தும்பை பொடி துளசி பொடி தூதுவளை பொடி என பொடிகளாக கிடைக்கின்றது. இவற்றினை வாங்கி தல ஒரு ஸ்பூன் என்ற அளவில் கலந்து மேற்கொண்ட கசாயத்தை தயாரிக்கலாம். இதைத்தொடர்ந்து 35 முதல் 40 நாட்கள் வரை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வர சிறந்த கபநீக்கியாக நுரையீரல் சுத்தமானது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஏற்கனவே ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்தாலும் கூட அரை மணி நேரம் கழித்து இந்த பானத்தையும் குடித்தால் நமது நுரையீரல் சுத்தமாகும். நுரையீரல் கழிவுகளை முழுமையாக அகற்றி அதில் உள்ள நுண்காற்று பைகளை சுத்தமாக கூடியது இந்த தும்பை, தூதுவளை, துளசி. இதை நாமும் பயன்படுத்தி மிகச்சிறந்த பலன்களை பெறலாம்.