பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இன்னும் 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.