“கோஹ்லியின் இடத்தை மாற்றக்கூடாது…” முன்னாள் இந்திய வீரர் கருத்து

Photo of author

By Vinoth

“கோஹ்லியின் இடத்தை மாற்றக்கூடாது…” முன்னாள் இந்திய வீரர் கருத்து

Vinoth

“கோஹ்லியின் இடத்தை மாற்றக்கூடாது…” முன்னாள் இந்திய வீரர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி பற்றிய பல்வேறு கருத்துகள் கடந்த சில மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதன் காரணமாக அவர் ஃபார்மை மீட்டெடுக்க சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அதிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் கோஹ்லியை அணியை விட்டு நீக்கவேண்டும் என்றும், அவரின் இடத்தை மாற்றி விளையாட வைக்க வேண்டும் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் ரஞ்சி கோப்பை ஹீரோவுமான வாசிம் ஜாஃபர் “கோலியின் இடத்தை மாற்றக்கூடாது. அதுபோல அவர் கண்டிப்பாக டி 20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். ராகுல் மற்றும் ரோஹித் ஓப்பனிங் இறங்க, கோஹ்லி மூன்றாவதாக இறங்க வேண்டும். மற்ற வீரர்கள் தேவைக்கேற்ப மாற்றி இறங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.