உடல் எடையை குறைக்கும் நீர் ஆகாரங்கள்!!
ஆண்கள் பெண்கள் என பலருக்கும் ஒரே பிரச்சனையாக இருப்பது உடல் எடை. ஆனால் உடல் எடையை குறைக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதற்கு வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்கும் எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
இதில் நீர் ஆகாரங்கள் மூலம் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். உடலில் தேங்கும் கழிவுகளை அவ்வப்போது சுத்தமாக நாம் வெளியேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த பானங்கள் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு உடல் எடையையும் குறைக்க வழிவகை செய்கிறது.
1. வெட்டிவேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
2. மல்லியை கொதிக்க வைத்து அதன் தண்ணீரை அருந்தலாம். இதில் அதிகப்படியான நார் சத்துக்கள் உள்ளதால் குடலில் உள்ள கழிவுகளை அகற்றும். மேலும் உடல் எடையையும் குறைக்கும்.
3. சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் உடல் எடை குறைக்க உதவும்.
4. இரவு தூங்கச் செல்லும்முன் சிறிது தேன் சாப்பிடுவதால் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.
5. இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வர ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறையும்.
இவை அனைத்தும் தொடர்ச்சியாக செய்து வந்தால் உடல் எடை கணிசமான அளவில் கட்டாயம் குறையும்.