பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

Photo of author

By Parthipan K

பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம்

Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காதான் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை நெருங்கி வருகிறது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாங்கள் திறக்க போகிறோம் என அதிபர் டிரம்ப் இன்று கூறியுள்ளார். குழந்தைகள் பல நேரங்களில் குறைந்த அளவிலான அறிகுறிகளையே கொண்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவது என்பது உண்மையில் மிக அரிது என கூறினார்.