மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவீரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

இதனால் பயிற்சி எடுக்க சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கத்திற்கு டோனி, ரெய்னா உள்பட இன்னும் சில வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். இந்த நிலையில் திடிரென டோனி தன்னுடைய ஒய்வை அறிவித்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்திய கேப்டன் விராட் கோலி, நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.  விராட் கோலி  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்.