இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!!

0
59
#image_title

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான “தேசிய ஜனநாயக கூட்டணியை” வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான திமுக,திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 காட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.கடந்த ஜூலை 18 அன்று நிறுவப்பட்ட இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார்,இரண்டாவது கூட்டம் பெங்களூர் மற்றும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலம் வாய்ந்த கூட்டணியாக ‘இந்தியா’ காணப்பட்ட நிலையில் தற்பொழுது அதில் இருந்து ஒவ்வொரு காட்சிகளாக கழண்டு வருகிறது.மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த சிபிஎம் கட்சியை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.இந்நிலையில் பரம எதிரிகளாக காணப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் நாட்டை ஆளும் பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டுமென்று நினைத்து வேறு வழியின்றி இந்தியா கூட்டணியில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தது.

கூட்டணி இறுதி செய்யபட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பது கேரள மாநிலத்தை ஆளும் சிபிஎம் கட்சிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளது.ஏற்கனவே கேரளாவில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆட்சி மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டணியில் சேர்ந்தால் தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் எழும் என்பதினால் கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.அதேபோல் மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட விரும்பாத சிபிஎம் அந்த மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. சிபிஎம் கட்சியின் இந்த முடிவால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.