எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!!

Photo of author

By CineDesk

எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம்!! ஸ்டாலினுக்கு பல்பு கொடுத்த அண்ணாமலை!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஆட்சியை பற்றியும் முதல்வர் ஸ்டாலினை பற்றியும் விமர்சிக்கும் விதமாக பேசி உள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது, மணிப்பூர் விவகாரத்தில் நமது முதல்வர் அரசியல் செய்வது வேடிக்கையாகவோ, விசித்திரமாகவோ இல்லை, அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறியது மட்டுமே தெரிகிறது.

கேலோ இந்தியாவை நாங்கள்தான் ஆரம்பித்தோம். அதனாலேயே மத்திய அரசு கேலோ இந்தியாவை ஆரம்பித்திருக்கிறார்கள். கேலோவை ஆரம்பித்த எங்களுக்கு கேலோ விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது தெரியும்.

அதனால் மத்திய அரசுதான் முதலாவதாக விளையாட்டு வீரர்களுக்கென கேலோ ஆரம்பித்த பின்னர், இன்று கேலோ விளையாட்டிற்கு நீங்கள், வாங்கல் என்று கூப்பிடுகிறீர்கள்.

நீங்களும் தான் பத்து ஆண்டுகளாக UPA  கூட்டணியில் இருந்தீர்கள். மேலும், இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தீர்கள் என்று கூறி உள்ளார்.இன்று முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் இருக்கிறார். அதனால் ஸ்டாலின் அடிக்கடி விளையாட்டு விளையாட்டு என்று கூறுகிறார்.

கேலோ விளையாட்டை ஆரம்பித்த மத்திய அரசுக்கு மணிப்பூரில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரியும்.

எனவே, நமது முதல்வர் அதில் எல்லாம் தலையிடாமல், முதலில் கர்நாடக மாநிலத்தில் பேசி காவிரி நீரை முழுமையாக தமிழகத்துக்கு வாங்கி தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணமாலை கூறி உள்ளார்.