சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

0
129

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த பிறகே வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் இதுபோன்று நிகழும் என்பதுதான் சிஎஸ்கே சம்பவம் கற்றுக்கொடுத்த பாடம் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

Previous articleரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!
Next articleதமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!