கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!!

Photo of author

By CineDesk

கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்!! மக்களுக்கு ஐ.நா எச்சரிக்கை!!

உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா நாடுகளில் வெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

இதனால் மக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்புகள் எற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த வெயிலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்படுகிறது.

இது குறித்து ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் ஆலோசகர் ஜான்நேர்ன் செய்தியாளர்களிடம் பேசி இருப்பதாவது, கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.

வெப்ப அலைகள் என்பது இயற்கை ஆபத்துகளின் ஒரு அங்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வெப்ப அலைகளுக்கு பல்வேறு மக்கள் பலியாகின்றனர்.

மேலும், வெப்ப மயமாதல், காலநிலை முறை மற்றும் அதிக வெப்ப நிகழ்வுகள் ஆகியவை இந்த வெப்ப அலைகளை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு உதாரணமாக, வடக்கு அரைக்கோளத்தில் ஒரே சமயத்தில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை திடீரென ஆறு மடங்கு உயர்ந்ததை கூறி உள்ளார். மேலும், இந்த வெப்ப அலைகள் குறைய வாய்ப்பில்லை. எனவே, நிச்சயமாக மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

உலகில் வெப்பம் அதிகமாக இருக்கும் கண்டங்களான ஐரோப்பா மற்றும் இத்தாலியின் சிசிலி, சர்டினியா தீவுகளில் 48 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று கூறிய நிலையில், தற்போது இந்த அளவை தாண்டி வெப்பம் அதிகரிக்க இருப்பதாக கூறி உள்ளார்.

பகலில் வெப்பம் இருப்பதை போலவே இரவும் காணப்பட்டால் அது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். மேலும் மாரடைப்பு மற்றும் இறப்பை கூட ஏற்படுத்தி விடும்.

உலகில் தினம்தோறும் மக்கள் தொகை அதிகரித்து வரும் தருவாயில், தற்போது இதற்கு போட்டியாக வெப்பமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த வெப்ப அலைகளைத் தடுக்க கார்பன் எரிபொருட்களை எரிக்காமல் இருக்க வேண்டும்.

மேலும், இந்த அதிகப்படியான வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு எழுபது ஆயிரம் பெரும், 2022 ஆம் ஆண்டு 62 ஆயிரம் பெரும் பலியாகி உள்ளனர். எனவே, இந்த வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.