எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

Photo of author

By Savitha

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

Savitha

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்.

VAO என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு கிராம நிர்வாக அலுவலர்கள் எங்களுக்கு துப்பாக்கி வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வி.யே.ஓ அதிகாரிகள் அனைவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வி.யே.ஓ அதிகாரி லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதால் நேர்மையான கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எனவே தற்காப்புக்காக எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.