நாங்கள் இருவரும் நாலு வருஷமா அந்த மாறிதான் இருந்தோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்!

0
268

நாங்கள் இருவரும் நாலு வருஷமா அந்த மாறிதான் இருந்தோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்!

யாஷிகா ஆனந்த் மாடலிங் மூலம் திரையுலகுக்கு வந்தார்.பின்பு 2016ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதன்முதலில் தமிழில் கவலை வேண்டாம் என்று திரைப்படத்தில் சைட் கேரக்டரில் நடித்தார். அந்த படத்தை எடுத்து அந்த வருடமே இவரது இரண்டாவது படமான துருவங்கள் பதினாறு என்ற படம் வெளியானது. அதில் ரகுமான் பிரகாஷ் ராகவன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அதனால் இவரது முகம் பெருமளவில் மக்கள் மத்தியில் இடம் பெறவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அந்த ஒரு படத்தின் மூலமே தமிழக இளைஞர்கள் அனைவரையும் தன்வயப்படுத்திக் கொண்டார். அந்த படத்தை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மகத் என்ற போட்டியாளர்களுடன் காதல் வயப்பட்டார். அதிலிருந்து வெளியேறிய உடன் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் தனது ஆண் நண்பர்களுடன் காரில் சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. மதுபோதையில் சென்று கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இவருடன் சென்ற தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க நேரிட்டது.

யாஷிகா விற்கும் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வெளியே வந்தவுடன் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது முன்னாள் காதலன் நிரூப்பை ஆதரிக்கும் விதத்தில் உள்ளே சென்றார். அவர அவர் உள்ளே சென்று வந்த உடன் நீர்ப் மற்றும் யாஷிகா விற்கு இடையே இருந்ததை பற்றி பலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் யாஷிகா அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். மேலும் அவரின் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் லைவிலும் கலந்து கொள்வார்.

அதைப்போல் இம்முறை தன்னிடம் என்னவெல்லாம் கேள்வி கேட்கவேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டார். இதற்கு ஒருவர் நீங்கள் மற்றும் உங்கள் முன்னாள் காதலன் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு யாஷிகா கூறிய பதில் அனைவரையும் வியக்க வைத்தது. நிரூப் மிகவும் நல்ல பையன். நாங்கள் இருவரும் 4 வருடகாலமாக லிவிங்டுகெதரியில் இருந்தோம். சில காரணங்களால் பிரிந்து விட்டோம். என மக்கள் மத்தியில் உண்மையை கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Previous articleகபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!
Next articleஉக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!