கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!

0
95

கபில்தேவ் இருந்த இடத்தில் அஷ்வின்! அடுத்தது இவர்தான்!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெடுகளை வீழ்த்தி இருந்தார். இதன்மூலம்  கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை அஷ்வின் முறியடித்தார். கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் இதுவரை 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கபில் தேவின் சாதனையை முறியடித்து, இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஷ்வின். 619 விக்கெட்களுடன் அனில் கும்ப்ளே முதல் இடத்தில்  உள்ளார். இதையடுத்து அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்திருந்தார். அதில்,

இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். அதிக விக்கெட்  வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த இரண்டாவது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் படேல் அஸ்வினின் இந்த சாதனை குறித்து கூறியிருக்கிறார். அதில், அஸ்வின் உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களுள் ஒருவர். நான் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008-ல் இருந்ததில் இருந்து கவனித்து வருகிறேன்.

அஸ்வின் டெஸ்டில் 436 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது மிகப்பெரிய மைல்கல். அவர் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் விளையாடினால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ளேவின் சாதனைக்கு அருகில் வரவோ அல்லது முறியடிக்கவோ முடியும். ஆனால் அது மிக நீண்ட பயணம் தான் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K