30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!
வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை குடும்பத்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 30 நாட்களில் மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தருவோம் என்று திமுக சட்டத் துறை செயலரும் எம்.பியுமான என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் எம்.பி என்.ஆர் இளங்கோ அவர்கள் போட்டி அளித்தார்.
அப்பொழுது எம்.பி என்.ஆர் இளங்கோ அவர்கள் “பொன்முடி அவர்களுக்கு எதிரான வழக்கில் உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். உச்சநீதி மன்றத்தில் மன்றத்தில் மேல் முறையீடு செய்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
உயர்நீதி மன்றம் கொடுத்துள்ள 30 நாட்களில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம். மேலும் அவருடைய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும் நாங்கள் முயற்சி செய்வோம்.
உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து அங்கு பொன்முடி அவர்களுக்கு ஜாமீன் கிடைத்து அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதியிழப்பு என்பது இல்லாமல் ஆகி விடும். திமுக கட்சி பலமாக இருப்பதை பார்த்து பாஜக பயப்படுகின்றது என்பதே யதார்த்தம்.
பொன்முடி அவர்களின் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கி நீதிபதி அவர்கள் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். அப்பழுக்கற்றவர். இருந்தாலும் அதிமுக கட்சியின் ஆட்சிக் காலத்தில் அவர் சட்டத்துறை செயலராக இருந்தார். பொன்முடி அவர்களின் வழக்கில் சொத்துக்களை முடக்கம் செய்வதற்கான கோப்புகள் அனைத்தையும் அவர் கையாண்டிருக்கின்றார்.
பொன்முடி தொடர்பான சொத்து குவிப்பு வழக்கை நடத்தும் பொழுது இந்த தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியாது. இதை இப்போது நீதிபதி அவர்களிடம் தெரிவித்தோம். அதற்கு நீதிபதி அவர்கள் “அப்பொழுது சொல்லியிருந்தால் நான் வழக்கில் இருந்து விலகி இருக்க மாட்டேன்” என்று கூறினார். வழக்கு என்ற ஒன்று சட்டம் சார்ந்த பிரச்சனை என்பதால் அதை உச்சநீதி மன்றத்தில் முன்வைப்போம்” என்று என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறினார்.