அதிமுக விற்கு வாக்களிக்க மாட்டோம்! பால் விலக்கு மீது சத்தியம் செய்த சமுதாயத்தினர்!

0
185

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வைத்த கோரிக்கையை நிறைவேற்றி அதன் மூலமாக அந்த கட்சியினரின் மக்களையும் அதேசமயம் வன்னியர்களின் வாக்குகளையும் கவர்வதற்கு திட்டமிட்டு அதில் முழுமையாக இறங்கிய அதிமுக, அதே நேரத்தில் மற்ற சமூகத்தினரை கடுமையான அதிருப்தி அடைய செய்து இருக்கின்றது. தேர்தலில் வன்னியர்களின் வாக்கை பெறுவதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியிருக்கிறது ஆனால் எங்களுடைய நிலைமை எந்த நிலையில் இருக்கிறது என்பதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து வரும் சீர்மரபினரின் கேள்வியாக இருந்துவருகிறது.

இந்தக் கோரிக்கையை வைத்து சீர்மரபினர் பல கட்ட போராட்டங்களை செய்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தன்னுடைய சமுதாய மக்கள் அனைவருடைய காலில் விழுந்தும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதியாக பால் மீது சத்தியம் செய்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 68 சமுதாயங்களை கொண்டிருக்கும் சீர்மரபினர் நல சங்கத்தினர் தங்களுக்கு டிஎன்டி சீர்மரபினர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் இந்தப் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்பது சொல்லப்படுகிறது.

இருந்தாலும் வன்னியர்களுக்கு மட்டுமே 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் விதமாக சின்னமனூர் அருகே சீர்மரபினர் சங்கத்தினர் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று அந்த சமுதாயத்தினருடன் சேர்ந்து பால் அகல்விளக்கு மீது சத்தியம் செய்து இருக்கிறார்கள்.இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது அதேபோல சீர்மரபினர் 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்பொழுது கொடுக்கப்படும் இட ஒதிக்கீடு சாதிவாரி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதன் பிறகு அந்த சாதிவாரி கணக்கெடுப்பு படி ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இந்த இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், பார்த்தோமானால் இந்த சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோரிக்கையானது நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஆனாலும் தமிழக அரசின் மீது இருக்கின்ற கோபத்தை அவர்கள் இந்த போராட்டத்தின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.சின்னமனூரில் சீர்மரபினர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தைப் போலவே ராமநாதபுரம், தென்காசி, போன்ற மாவட்டங்களிலும் இந்த சங்கத்தினர் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள் .ஆனால் எதிர்காலத்தில் இவர்களுடைய கோரிக்கையானது நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது அதுவரையில் அந்த சமூக மக்கள் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!
Next articleசீர்மரபினரை தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக களமிறங்கிய மற்றொரு சமூகம்!