அதிமுகவை கைப்பற்ற சசிகலா மற்றும் தினகரன் போடும் சதித்திட்டம்! ஓபிஎஸ் அதிர்ச்சி!

0
92

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார் சசிகலா. இதனைத் தொடர்ந்து சசிகலா அதிமுகவை தன்வச படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். இருந்தாலும் தமிழகம் வந்ததிலிருந்தே அமைதியாக இருந்த சசிகலா சமீபத்தில் திடீரென்று தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதோடு ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன் என்று ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுயேட்சையாக களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவும் எந்த ஒரு கட்சியையும் சாராமல் சுயமாக களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் சிறை தண்டனை பெற்ற காரணத்தினால் சுமார் பத்து வருட காலத்திற்கு தேர்தலில் நிற்க முடியாது என்பது விதிமுறை.ஒருபுறம் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதிமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபுறமும் சசிகலா நான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையில் இருந்து வருகின்றார்.

சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் என்னதான் அவர் மீது வெறுப்பை கொட்டினாலும் தான் அரசியலில் இல்லை என்றால் பரவாயில்லை ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவராலும் பாராட்டப் பட்டிருக்கிறது என்பதே உண்மை.நிலவரம் இப்படி இருக்க மறுபுறமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் நேர்காணல் நடந்திருக்கிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்ப மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது ஒருபுறம் சசிகலா அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார். மறுபுறம் டிடிவி தினகரன் அதிமுகவை பலவீனப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது சசிகலா மற்றும் தினகரன் கூட்டு வேலையாக இருக்குமோ என்றும் சந்தேகப்படுவதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாக இருந்து செயல்பட்டால் அதிமுகவை நிறுத்துவது கடினம். அதன் காரணமாக, தனித்தனியே பிரிந்து சென்று அதிமுகவை பலவீனப்படுத்துவது அதற்கான வேலைகளை செய்யலாம் என்று அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அதனை அதிமுக தலைமை எவ்வாறு சமாளிக்கப் போகிறது. அதனை சமாளித்து எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு அந்த கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதே தற்சமயம் அனைவருடைய கேள்வியாகவும் இருந்துவருகிறது.