அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறும்போது இந்த தோல்வியை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தோம் அப்போது வெற்றி எங்கள் பக்கம் என்று எண்ணினேன் ஆனால் எங்கள் கனவை பட்லரும், வோக்ஸ்சும் அபாரமாக விளையாடி வெற்றியை பறித்தனர். அவர்கள் அடித்த ஒவ்வொரு சாட்டுகளும் பிரமாதமாக  இருந்தது. ஆனால் 2வது போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.