ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!

Photo of author

By Rupa

ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!

பொது விநியோக திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் தமிழக அரசு இணைந்து
ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலையில் சர்க்கரை,பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தொடர் விலைவாசி உயர்வால் ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் பெரும்பாலான ரேசன் கடைகளில் அதிக முறைகேடு நடைபெறுகிறது.அரிசி, பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் எடை குறைவாக இருக்கிறது என்று பொது மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரேசன் ஊழியர்கள் உரிய நேரத்தில் கடைகளை திறக்காததால் சில குடும்ப அட்டைதாரரால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் போய்விடுகிறது.இதனால் ரேசன் ஊழியர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ரேசன் கடை திறப்பு நேரத்தை கூட்டுறவுத்துறை மாற்றியுள்ளது.தலைநகர் சென்னையில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் காலையில் 8:30 முதல் 12:30 மணி வரை இயங்கும்.மதிய நேரத்தில் 3:00 முதல் 7:00 மணி வரை இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் இதர மாவட்டங்களில் காலையில் 9:00 முதல் 1:00 மணி வரை இயங்கும்.மதிய நேரத்தில் 2:00 முதல் 6:00 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த நேரம் மாற்றத்தை அனைத்து ரேசன் ஊழியர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது.

அது மட்டுமின்றி மதிய இடைவெளி நேரத்தில் ரேசன் பொருட்களை பதுக்கி வைத்தல்,கடத்தல் போன்ற முறைகேட்டில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் இடைவெளி நேரத்தை குறைக்கவும் கூட்டுறவுத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.