மீண்டும் சிக்கலில் மாட்டிய TTF வாசன்.. இவர் விட்டாலும் பிரச்சனை இவரை விடாது போல..!!

0
177
YouTuber TTF Vasan

YouTuber TTF Vasan: தற்போது 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் பைக் ஸ்டண்டுகள் நிறைய செய்த அதனை தனது யூடியூப் சேனல்களில் பதிவேற்றி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் இந்த டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து அதனை யூடியூப்களில் பதிவேற்றி வருவார்.

இவரை பாலோவ் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தான். இவருக்கு கல்லூரி மாணவிகளும் அதிக அளவு பாலோவர்களாக இருக்கிறார்கள். இவர் சமீபக்காலமாக தொடர்ந்து பல சிக்கல்களில் மாட்டி அதன் மூலம் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இவர் யூடியூப் சேனல்களில் அதிவேகமாக பைக் ஓட்டிய பதிவுகளை வெளியிட்டதாகவும்,  அதிவேகமாக பைக் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் விதமாக இருந்ததால் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு சமீபத்தில் அதாவது கடந்த ஆண்டு இவர் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்று வீலிங் செய்ததால் விபத்தில் சிக்கி ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது கை, கால் எல்லாம் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதும் காஞ்சிபுரம் காவல்துறையினரால் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் டிடிஎஃப் வாசன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்த நிலையில் பல முறை அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, அவரின் பைக்கை எரிக்கும்படியும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போஸ்ட் செய்த யூடியூப் சேனலையும் நீக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டார். அதற்கு அடுத்து எப்படியோ ஜாமின் கிடைத்து வெளியில் வந்த டிடிஎஃப், இந்த ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் என்ன இன்டர்நேஷனல் உரிமம் எடுப்பேன் என்று கூறி வீடியோ வெளியிட்டார்.

தற்போது மற்றொரு சிக்கலாக டிடிஎஃப் வாசன் சென்னை அயப்பாக்கத்தில் வைத்துள்ள இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு சென்னை அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இவர் வைத்துள்ள கடையில் அதிக சத்தம் கேட்கும் சைலென்சர்களை விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்த செய்தி அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் படிக்க: மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்!! மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாக அறிவிப்பு..!!