வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

Photo of author

By Parthipan K

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் வரும் நவம்பர் 28,டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் பிகாரில் இருந்து பெங்களூருக்கு வண்டி எண் 03253 வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து மாறுமார்க்கத்தில் பிகாரில் இருந்து திங்கள் கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.

அதனை தொடர்ந்து பிகாரில் இருந்து எர்ணாகுளத்திற்கு வண்டி எண் 05555 நவம்பர் 28 ,டிசம்பர் 5மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.மேலும் திங்கள்கிழமை இரவு 9.15 மணிக்கு பிகாரிலிருந்து புறப்படும் ரயில் புதன்கிழமை பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை ,சேலம் ,ஈரோடு மற்றும் கோவை வழியாக காலை 6 மணியளவில் எர்ணாகுளம் வந்தடையும்.

மறுமார்க்கமாக  05556 என்ற வண்டி எண் கொண்ட ரயில் நவம்பர் 24,டிசம்பர் 8மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயிலானது வியாழக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமையன்று கோவை ,ஈரோடு,சேலம் ,ஜோலார்பேட்டை ,காட்பாடி ,பெரம்பூர் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு பிகார் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.