Weight Gain Tips: நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களா? இதை ஒரு 14 நாட்கள் சாப்பிட்டால் புசுபுசுன்னு ஆயிடுவீங்க!!

Photo of author

By Divya

Weight Gain Tips: நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களா? இதை ஒரு 14 நாட்கள் சாப்பிட்டால் புசுபுசுன்னு ஆயிடுவீங்க!!

நவீன உலகில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செல்லுவது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது.ஆனால் ஆரோக்கிய உணவுகளை ஒதுக்கி விட்டு நம் உடலுக்கு எது கெடுதல் கொடுதல் விளைவிக்கிறதோ அதை தான் தேடி தேடி சாப்பிட்டு வருகின்றோம்.

சாப்பிடும் நேரத்தையே முழுமையாக மாற்றி வருகிறோம்.உணவு அருந்த வேண்டிய உரிய நேரத்தை கடந்த பின்னர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கிறது.குழந்தைகள் விட பெரியவர்கள் தான் இந்த தவறை அதிகம் செய்கிறார்கள்.இதனால் உடல் எடை கூடி உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் எளிதில் தொற்றி விடுகிறது.

ஆனால் சில மனிதர்களுக்கு என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்காமல் இருக்கும்.சிலர் உடல் எலும்புகள் தெரியும் அளவிற்கு மிகவும் ஒல்லியான தோற்றம் கொண்டிருப்பார்கள்.இவர்கள் தங்கள் உடல் எடையின் அளவை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1)உருளைக்கிழங்கில் உள்ள அதிகளவு கலோரிகள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

2)முளைகட்டிய பச்சை பயிறை சாப்பிட்டு வந்தால் தசைகள் வலிமை பெறும்.

3)வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

4)சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

5)பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.

6)தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.முட்டையில் அதிகளவு புரதம் நிறைந்திருப்பதால் அவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.