கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மனுவினை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது.
கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்த பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த கொரோனா தொற்று சமயத்தில் சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதில் நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான ஆர்.எஸ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில், சட்டமன்ற தேர்தல் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லாத நிலையில், இந்த மனுவினை அளித்தது அர்த்தமற்றதாக கூறியுள்ளனர்.
மேலும், சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்குள் நுழைந்து தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனுவிற்கு தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
தேர்தலை ஒத்தி வைக்கக் கோரிய மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பேரிடர் காலங்களில் வாக்கெடுப்பினை ஒத்திவைக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதி வழங்குகிறது.
இந்த சட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க கோரி, மனுதாரரான அவினாஷ் தாகூர் மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் தலைமை தேர்தல் ஆணையருக்கு இதுகுறித்து உத்தரவு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தான் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். மேலும் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் ஒருபோதும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என அந்த நீதிபதிகள் கூறியதுடன், பீகாரில் சட்டமன்ற தேர்தல் ஒத்தி வைப்பது குறித்த மனுவினை தள்ளுபடி செய்துள்ளனர்.