அது என்ன சோம்பேறி சிக்கன்.. இதை எப்படி செய்வது? தெளிவான விளக்கம் இதோ!!

0
48
#image_title

அது என்ன சோம்பேறி சிக்கன்.. இதை எப்படி செய்வது? தெளிவான விளக்கம் இதோ!!

நம்மில் பெரும்பாலானோருக்கு சிக்கன் பிடித்த உணவாக இருக்கிறது.இதன் ருசியும், வாசனையும் ஆளையே சுண்டி இழுக்கும்.என்னதான் சிக்கன் பிடிக்கும் என்றாலும் அதை வீட்டில் சமைக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடையில் வாங்கி உண்பதை நாம்மில் அதிக பேர் வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறோம்.காரணம் அசைவம் என்றால் சமைக்க நீண்ட நேரம் ஆகும் என்பதினால் தான்.ஆனால் அதற்கு ஒரு தீர்வாக இருப்பது தான் இந்த சோம்பேறி சிககன்.இதை செய்வது மிகவும் சுலபம்.அதுமட்டும் இன்றி வாசனை ஊரையே கூட்டும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*சிக்கன் – 1/2 கிலோ

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

*கரம் மசாலா – 1 தேக்கரண்டி

*வெண்ணெய் – 2 தேக்கரண்டி

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு -2 தேக்கரண்டி

*தக்காளி – 1(நறுக்கியது)

*கஸ்தூரி மேத்தி – 1 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் வாங்கி வந்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்யவும்.

இந்த சிக்கனை இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,அதேபோல் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து கொள்ளவும்.

பின்னர் மிளகாய் தூள் 2 தேக்கரண்டி,கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி,கரம் மசால் 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கனை நன்கு பிசைந்து கொள்ளவும்.

தொடர்ந்து 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,1 தேக்கரண்டி எண்ணெய்,1 தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி சேர்த்து மீண்டும் சிக்கனை நன்கு பிசைந்து கொள்ளவும்

பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் சிக்கன் கலவையை அதில் போட்டு நன்கு வதக்கவும்.அடுத்து 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கடையை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.பின்னர் சிக்கன் வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.