அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன். திமுக வின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் இவரால் நியமிக்கப்பட்ட அனைத்து பொருப்பாளர்களும் நீக்கப்பட்டு பழைய பொருப்பாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர் மேலும், சமீபகாலமாக இவரும் கட்சி கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.இதனால் அதிருப்தி அடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.இந்த தகவல் இணையத்தில் தீவிரமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக இதுப்பற்றி விசாரிக்க தொடங்கினார்.அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

நேற்று தான் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் டெல்லியில் பாஜக தலைவரை சந்தித்துவிட்டு வந்தார்.அதன் பின் செய்தியாளர் சந்திப்பின் போது என் நிலை உங்களுக்கும் நேரிடலாம் அதனால் இப்போதே திமுகவிலிருந்து பாஜக விற்கு வந்து விடுங்கள் என்று கூறினார்.இதனால் திமுக வில் அதிருப்தியில் உள்ள சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையபோவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் இது தவறான தகவல் என்று தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில்,கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.அந்த அற்பர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டர்.கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார். என்னை கழகத்திலிருந்தும், தலைவர் இடம் இருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.இனியும் இதுபோன்ற விஷம பிரச்சாரத்தில் ஈடுப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலினை மீட்டெடுத்தார்.

Leave a Comment