சித்திரை திருநாள் அன்று என்ன செய்யலாம்? எவையெல்லாம் செய்யக் கூடாது?
சோபக்கிருது வருடம் முடிந்து சித்திரை முதல் நாளான இன்றுடன் குரோதி வருடம் தொடங்குகிறது. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் புகுத்திக் கொள்ளுங்கள்.
பகைமை இன்றி மகிழ்ச்சியாக வாழ ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.பாயாசம்,பொங்கல் போன்ற இனிப்பான உணவுகள் செய்து சொந்தங்களுக்கு வழங்குங்கள்.
வீட்டில் இடம் இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த மரக் கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.இந்த நன்னாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.காலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன் எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும்.பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
முடிந்தவர்கள் நெய்வேத்தியம் படைக்கலாம்.ஏழைகளுக்கு பண உதவி,உணவு அல்லது புது துணி வாங்கி கொடுக்கலாம்.இதனால் ஒருவித மகிழ்ச்சி கிடைக்கும்.வீட்டு பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள்.அவர்கள் கொடுக்கும் செலவு செய்யாமல் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ளவர்களிடம் கூடி அமர்ந்து பேசி சிரித்து மகிழுங்கள்.இந்த நன்னாளில் சுமங்கலி பெண்கள் மஞ்சள்,குங்குமம்,தாலி கயிறு வாங்கினால் சிறப்பு.பணம் இருப்பவர்கள் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வரலாம்.
தங்கம் வாங்க பணம் இல்லாதவர்கள் வீட்டில் ஒரு உண்டியல் வைத்து தங்களால் முடிந்த அளவு பணம் போட்டு சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.
இந்த சித்திரை நன்னாளில் சில செயல்களை தவிருங்கள்.அதாவது அசைவம் சாப்பிடுவது,மது அருந்துவது,தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற செயல்களை தவிர்த்தால் தங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.