25 திருடர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! பிரேசில் பெரும் பரபரப்பு? நடந்தது என்ன ?

Photo of author

By Parthipan K

பிரேசில் நாட்டின் முக்கிய வங்கிகள் செயல்படும் நகருக்குள் நுழைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 திருடர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

பல மணி நேரமாக நடந்த போராட்டத்தில் விதவிதமான துப்பாக்கி வகைகைள கொலையாளிகள் பயன்படுத்தினர். பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகறில் உள்ள நீண்ட சாலையில் வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன.

அங்கு பயங்கர அதிக ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல்கள் வங்கிகளுக்குள் செல்ல திட்டம் தீட்டினர்.தகவலை தெரிந்துகொண்ட காவல் அதிகாரிகள் திருட்டு கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கொள்ளையர்களும் காவல் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சூடு நடத்தினர். இதில் 25 திருடர்களின் உயிர் பலியானதாக கூறப்படுகிறது.

மேலும், இது போல் கடந்த ஆண்டு வங்கி கொள்ளையர்கள் ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் வங்கி ஊழியர்களை பிணய கைதிகளாக வைத்து கொள்ளை முயற்சி செய்ய இருந்ததை வெற்றிகரமாக காவல் அதிகாரிகள் கடும் முயற்சி செய்து வாங்கி ஊழியர்கள் மற்றும் பணத்தை எவ்வித சேதமும் ஏற்படாமல் காப்பாற்றினர்.

இந்நிகழ்ச்சி அந்த பகுதியில் வசித்து வரும் மக்களியிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.