13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

Photo of author

By CineDesk

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

CineDesk

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

எனவே 68 வயது கொண்ட இந்த சிறுமியின் தந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தினம் தினம் அச்சிறுமி வேதனையை அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை பற்றி வெளியே யாரிடமாவது கூறி விட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியின் தந்தை அவரை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு 29 வயதான ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் சிறுமிக்கு உதவுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் சென்ற சிறுமியை அந்த நபர் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தந்தை மகளை காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் சிறுமி அந்த நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார் என்ற தகவலை கண்டுபிடித்தனர்.

மேலும் சிறுமி தனது தந்தையாலும் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காவல் துறையினர் அவரையும் சேர்த்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.