என்னது… பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா? அலார்ட் !!

0
137

 

என்னது… பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா? அலார்ட்

 

மலிவாக கிடைககும் பீட்ரூட் ஜூஸில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. அதில் உள்ள இரும்புச் சத்து, பாலிக் ஆசிட் உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். மேலும், உடம்பில் உள்ள ரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியையும் உயர்த்தும். பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்யும்.

 

ஆனால, பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடித்தால் உடலுக்கு சில தீமைகள் ஏற்படும் என்று மருத்துவ ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது அது நம் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

 

சரி வாங்க… பீட்ரூட ஜூஸ் குடித்த என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று பார்ப்போம் –

 

சிறுநீரக கற்கள்

 

பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்கும்போது, அதில் உள்ள ஆக்சலேட்சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும். மேலும், சிறுநீர் ஆக்சலேட் வெளியேற்றத்தை அதிகரிப்பதால், கால்சியம் ஆக்சலேட் கற்களின் வளர்ச்சிக்கு வழிசெய்துவிடும். எனவே, பீட்ரூட் ஜூஸை தேவையான அளவில் குடித்தல் நல்லது.

 

ஒவ்வாமை

 

பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்கும்போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இதனால் உடல்நலம் மிகவும் உணர்திறன் கொண்டு செயல்படத் துவங்கும். பீட்ரூட்டை அதிகம் சாப்பிடும் சிலருக்கு தொண்டையில் இறுக்கம் ஏற்படும். மேலும், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்னைகள் உண்டாக்கிவிடும்.

 

மலச்சிக்கல்

 

பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்கும், அது சிறுநீர் மற்றும் மலம் சிவப்பு நிறத்தில் போகும். இதைத்தான் பீட்ரூரியா என்று சொல்கிறார்கள். அதாவது நாம் சிவப்பு நிற உணவை அதிகமாக சாப்பிடும்போது அது இந்நோயை பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கும். ஒரு மனிதனுடைய கழிவு இயற்கையான நிறத்தில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உடலில் என்னமாதிரியான பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படி இல்லையென்றால் ஆபத்துதான்.

 

கர்ப்பணிகள்

 

கர்ப்பிணிகள் அதிகமாக பீட்ரூட் ஜூஸை குடித்தால் வயிற்றுப்பிடிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாற்றை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. மேலும், பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு ஆற்றல் செயலிப்பு, தலைவலி, தலைசுற்றலை உண்டாக்கிவிடும். மேலும், பார்வை மந்தம், கால்வலி, தசைப்பிடிப்பை ஏற்படுத்திவிடும்.

 

கல்லீரல்

 

பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்கும்போது, அவை கல்லீரலில் உலோக அயனிகளின் திரட்சியை ஏற்படுத்திவிடும். மேலும், அதிகப்படியான பீட்ரூட் சாறு மற்றும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்படி நாம் அதிகப்படியாக சாப்பிடும்போது, அவை நம் உடலில் கால்ஷியம் செயலிழப்பை ஏற்படுத்திவிடும். கால்சியம் அளவு குறைவாக இருக்கும் பெண்கள், பீட்ரூட் ஜூஸை அதிகமாக சாப்பிடக்கூடாது.

 

 

Previous articleஉள்ளங்கை, கால் அரித்தால் பணம் வருமா? பாதிப்பு வருமா? அறிவோம் !!
Next articleவெயிலால் உதடு பாதிப்பு அடைகின்றதா.. வெயிலில் இருந்து உதட்டை பாதுகாக்க இதை பண்ணுங்க !!