தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

Photo of author

By Amutha

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

Amutha

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!! 

தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது.

இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், போதை பொருட்கள் அதிகரிப்பு, என சட்டவிரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே சட்டம் ஒழுங்கை சீரழித்து வரும் திமுக அரசிற்கு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த அறிக்கையை தெரிவித்துள்ளார்.