ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

Photo of author

By Savitha

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

Savitha

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் தாகூர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல்19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்.

இந்த கூட்டத்தில் அதிமுக தலைமையில் ஜெயகுமார், திமுக சார்பில் ஆர். எஸ். பாரதி, பாஜக சார்பில் தியாகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சந்திரமோகன், தேமுதிக சார்பில் சந்தோஷ்குமார், சி. பி.எம்.சார்பில் ஆறுமுக நாயனார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

மேலும், பதற்றம் நிறைந்த வாக்குசாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அரசியல் கட்சிகள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.