தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

0
291
#image_title

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் தேங்காய் உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. இது போல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், பழம் படைக்கின்றோம்.

அதுமட்டும் இல்லாமல் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால், தேங்காய் சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயில் இருந்து தான் தென்னை மரம் முளைக்கும். அது போல், வாழை மரத்தில் இருந்து தான் வாழைக்கன்று உருவாகும். கொட்டையில் இருந்து வருவதில்லை. அப்படி நம் எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக படைக்கும் மரபினை நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

Previous articleகாயகல்ப மருந்து! என்றும் இளமை!
Next articleஇந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!