செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! 

0
103
What the youth did in the selfie craze!! Then the disaster!!
What the youth did in the selfie craze!! Then the disaster!!

செல்ஃபி மோகத்தில் இளைஞர் செய்த காரியம்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! 

செல்ஃபி மோகத்தில் இளைஞர் ஒருவர் 2000 அடி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார்.

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர் கோபால் சவான். இவர் தனது நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினை காணச் சென்று உள்ளார். குகையின் அழகை ரசித்துக்கொண்டே அடுத்ததாக அஜந்தா ஓவியங்கள் நிறைந்த மலை உச்சிக்கு சென்றனர்.

இந்த மலை உச்சிக்கு அருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஏறத்தாழ 2000 அடி ஆழம் இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியானது அஜந்தா  குகையையும், மலை உச்சியையும் தனியாக பிரிக்கிறது. அந்த மலை உச்சிக்கு சென்ற நண்பர்கள் அனைவரும் செல்ஃபி எடுத்துள்ளனர்.

நண்பர்களில் கோபால் சவானுக்கு சற்று செல்ஃபி மோகம் அதிகம். மழையில் எடுத்த செல்பிக்கள் போதாது என்று மலை உச்சியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அங்கிருந்து திடீரென கால் தவறி சப்த குந்தா நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டார்.

நல்ல வேளையாக கோபாலுக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் நீந்தி அருகில் உள்ள கல்லினை பிடிமானத்திற்கு பிடித்துக் கொண்டார். இதனால் நிம்மதியற்ற அவரின் நண்பர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர மீட்பு படையினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிற்றின் மூலம் கோபாலை பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்பு பணியை பார்க்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதில் ஒரு பயணி இந்த மீட்பு பணியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Previous articleமார்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாறி சம்பளம் வாங்கும் யோகிபாபு!! சொத்துமதிப்பு மட்டும் இவ்வளவா??
Next articleஅரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!