அனல் காய்ச்சும் வெயிலில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் உடல் ஜில்லுனு இருக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

அனல் வெயிலில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் உடல் ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கின்ற வெயிலுக்கு உடலை குளுமையாக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகிர்தண்டா செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)காய்ச்சாத பால் – 1 லிட்டர்
2)வெள்ளை சர்க்கரை – 1 கப்
3)நன்னாரி சர்பத் – 2 தேக்கரண்டி
4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
5)ஐஸ் கிரீம் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் பாதாம் பிசின் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கப் சர்க்கரை கொட்டி கேரமல் பதம் வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் மற்றொரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பால் ஊற்றி நன்கு சண்ட காய்ச்சி இறக்கி கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு அதில் காய்ச்சிய கேரமல் பாதி அளவு ஊற்றவும்.

அதன் பிறகு ஐஸ் க்ரீமில் மீதி கேரமலை ஊற்றி 1/2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பெரிய கிளாஸ் எடுத்து அதில் ஐஸ் க்ரீம்,சண்ட காய்ச்சிய பால்கோவா,கொதிக்க வைத்த பால்,ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் நன்னாரி சர்பத் ஊற்றினால் உடலை குளுமையாக்கும் ஜிகிர்தண்டா தயார்.