கொரோனா தடுப்பூசி போட்டிருக்கீங்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

0
139
Corona virus
Corona virus

கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இதே சமயத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 63வது நாளாக மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 233 பேருக்கும், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 374 பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டக்கொண்டவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற செய்திகள் பல வாட்ஸ் ஆப் குரூப்கள் மூலமாக தீயாய் பரவி வருகின்றன. ஆனால் அவற்றில் பல வதந்திகளாகவே உள்ளன. அதை சாப்பிடக்கூடாது, இதை செய்யக்கூடாது என வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மை என்னவெனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம்.

புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிடுவது அவசியம். புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள தடுப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். அசைவ உணவால் செறிமான பிரச்சனைகள் ஏற்படும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ளக்கூடாது.

எந்த வகையான தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் 72 மணி நேரத்திற்கு மது அருந்தக்கூடாது என்பது விதி. அதனால் கொரோனா காலத்தை மனதில் கொண்டு மது அருந்தாமலும், புகை பிடிக்காமலும் இருப்பது நல்லது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு முன்னும், பின்னும் தாங்கள் ரெகுலராக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். இருதய கோளாறு உள்ளவர்கள், ஆஸ்பிரின் போன்ற மருந்து எடுத்துக் கொள்பவர்கள், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேன்சர் சிகிச்சையில் இருப்பவர்கள் ஆகியோர் மருத்துவர்களின் ஆலோசனைகளின் பெயரில் மருத்துகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleஎன் தாய்க்கே இந்த நிலையா? பிரசாரத்தில் கண்கலங்கிய முதல்வர்! உருக்கமான வீடியோ!
Next articleசெந்தில் பாலாஜிக்கு கிடுக்குப்பிடி போட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்!