எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

Photo of author

By Sakthi

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

Sakthi

Updated on:

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நடிகர்களும், சமூக போராளிகளும் என்ன ஆனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் “அதிமுக ஆட்சியில் சாராயம் குறித்து பாட்டு பாடியவர்கள், நடிகர்கள், சமூகப் போராளிகள் பலரும் எங்கே போனார்கள். இத்தனை பேர் உயிரிழந்துள்ள நிலையில் திமுக கட்சியின் கூட்டணி கட்சிகள் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.