தற்பொழுது வயிறு தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பல பாதிப்புகள் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உட்கொள்ளாமல் வாய் ருசிக்காக உட்கொள்வதால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கின்றோம்.இன்றைய இளைஞர்கள் உணவு நேரத்தையே முழுமையாக மாற்றிவிட்டனர்.காலை உணவை 11 கடந்த பிறகு உட்கொள்வது மதிய உணவை அதிகளவு உட்கொள்வது,இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் உட்கொள்வது போன்ற பழக்கங்களால் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளும் மோசமான பாதிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.
அதேபோல் நாம் சாப்பிடும் பொழுது செய்யும் சில’தவறுகளால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.சிலர் சாப்பிடும் பொழுது உரையாடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.சாப்பிடும் பொழுது உரையாடினால் வயிற்றுக்குள் அதிகளவு காற்று சென்று வயிறு உப்பசத்தை ஏற்படுத்திவிடும்.அதேபோல் வயிற்றுக்குள் அதிகளவு காற்று தேங்கினால் வாயுத் தொல்லை ஏற்படும்.
சிலர் சாப்பிடும் பொழுது அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள்.இதனால் வயிறு உப்பசம் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படக் கூடும்.எனவே உணவு உட்கொள்ளும் நேரத்தில் உரையாடுவதை தவிர்க்க வேண்டும்.உணவை நன்கு மென்று சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை போன்றவை ஏற்படாமல் இருக்கும்.
வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை பிரச்சனை இருந்தால் இஞ்சியை இடித்து சாறு எடுத்து பருகி பலன் பெறலாம்.அதேபோல் சூடான நீர் பருகினால் வயிறு உப்பசம் முழுமையாக சரியாகும்.

